Thursday, March 30, 2017

186 எதுவும் கற்பது வீணே(உள்ளம் என்பது ஆமை)எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே (2)
கற்றால் கிடைப்பது-பாதி மண்ணில் வாழல் அதன்படி மீதி (2)
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே
(MUSIC)
தெய்வம் என்றால்-அது கோவில் தனில்-சிலையாய் இருக்கணும் என்பாய்
(2)
உள்சென்றால் அது-உண்டு இல்லை-என்றால் பெரும்-தொல்லை
நெஞ்சே-உன்னால்-பெரும் தொல்லை
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே 
(MUSIC)
*சோறும் சுமையாய்த் தெரியும் அது தோளில் இருக்கும் வரைக்கும் (2)
உண்டிட வயிறில் நிறையும்  ஆனால் உந்தன் பாரமும் குறையும் (2)
அது போலது போலத்தான் இறையும்
துவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே
கற்றால் கிடைப்பது-பாதி மண்ணில் வாழல் அதன்படி மீதி
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே


*சோற்றுமூட்டையின் பாரம், தோளில் சுமக்கும் வரை உன்னை அழுத்தி நடப்பதில் கஷ்டம் கொடுக்கும் .அதே சமயம் அந்த சோற்றை ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு மர நிழலில் அமர்ந்து ஆனந்தமாகப் புசித்த பிறகு., உன் உடல் வலுப்பெறும் , நடை துரிதப்படும். எடை ஒன்றும் குறையவில்லை. அது (வெளியிலிருந்து) மூட்டையிலிருந்து வயிற்றுக்குள் (உள்ளே) போய் விட்டது. ஆனால் எடையால் இப்போது தடை இல்லை. அது போல , கடவுளை வெளியில் வைத்து அவரைத் தோளில் சுமக்கிற வரையில் உனக்கு பாரம் தான். உள்ளே அவரைக் கண்டு செரித்தால் (செபித்தால்), லேசாகி ஆனந்த வெள்ளத்தில் மிதப்பாய் .Monday, March 27, 2017

185 என்னத்தைச் செய்ய(எண்ணப் பறவை சிறகடித்து)


என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா
என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் இருக்கின்றதா
(1+SM+1)
 (MUSIC)
எந்தன்-பாடல் பாராட்டில்-நீ கொஞ்சம் மகிழ்ந்திடய்யா (2)
பிறகு உய்ந்திடும் வரையுன் விழித்திறப்பாலே இன்பம் முகிழ்த்திடய்யா
பிறகு உய்ந்திடும் வரையுன் விழிச்சிறப்பாலே இன்பம் முகிழ்த்திடய்யா
(SM)
உனக்கிது-நன்றா உன்-சிசுவிங்கே துடிப்பது தெரியல்லையா
உன்னையும்-தந்தை என்று உரைப்பார் அதன்படி நடந்திடய்யா
என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா
என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் இருக்கின்றதா
 (MUSIC)
லோகத்தில்-உந்தன் திரு-விளையாட்டை என்றும்-நடத்துகிறாய்
அந்தப்-பெருமையினாலே குழந்தையைப்-போலே துள்ளி-மகிழுகிறாய்
(SM)
என்னையுன்-போலே உன்னுடன்-சேர்த்தே மகிழ வைத்திடய்யா
நான் அமைதியுடன் அதைக்-கொண்டே யுகம்-பல ஆச்சுதய்யா
என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா

என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் இருக்கின்றதா
Friday, March 17, 2017

184 சரிதானா (நீ தானா என்னை அழைத்தது)


**The craving for fruit will render all spiritual disciplines fruitless.
_______________
சரிதானா-நீ எண்ணுவது சரிதானா-நீ சொல்லுவது
சரிதானா-நல் சேவையினைப் பலன்-எதிர்பார்த்து-நீ பண்ணுவது
சரிதானா..!
சரிதானே-நான் எண்ணுவது  இதுதானே-பிறர் பண்ணுவது
இதைப் போயே-ஓர் குறையெனவே சொல்கிற உன்னை-என்ன பண்ணுவது 
சரிதானே
(MUSIC)
புரியலையே-உன் செயல்-தோழி-நீ புரிவதிலே-பலன் இலை-தோழி
(1+SM+1)
பணமோ-காசோ வேண்டி-நீ செய்திடல்
*பூஜையில்லை-கடைத் தொழிலது-தோழி
(1+SM+1)
சரிதானா-நீ எண்ணுவது சரிதானா-நீ சொல்லுவது
சரிதானா-நல் சேவையினைப் பலன்-எதிர்பார்த்து-நீ பண்ணுவது
சரிதானா
(MUSIC)
சேவையைப் பலர்-செய்யப் பார்த்திருக்கேன்
அதில் பெயர்-புகழ் எனப்-பெறக் கேட்டிருக்கேன்
(1+SM+1+SM)
இது-தான் உயர்வென அறிந்திடுவேன்-
அதனால்-அதைப் பலன் பெறப் புரிந்திடுவேன்
சரிதானே-நான் எண்ணுவது  இதுதானே-பிறர் பண்ணுவது
இதைப் போயே-ஓர் குறையெனவே சொல்கிற உன்னை-என்ன பண்ணுவது 
சரிதானே
சரிதான் போ..*கடைத் தொழில்= 1) Business, 2) ஞான ஏணியில் கடை நிலையில் இருக்கும் மாந்தர்கள் செய்யும் தொழில்   
183 புத்தி முட்டும்-கடா(சட்டி சுட்டதடா)
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா (2)
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
*நாலும்-கடந்து குடித்த-பின்னால் நல்லது-கிட்டக்கத் தோணுமடா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
(MUSIC)
ஆதி பகவான் பேரை-உரைக்கப் பாவம் உன்னைத்-தொடா
**நேதி என-நீ அதையும்-விலக்க இருமை என்றும்-இரா
(2)
இருமை-போக விரைவில்-போக எண்ணம் இடம் தரா (2)
எண்ணம்-போக உதயமாகும் இன்பம் என்றும்-விடா
(SM)
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
 (MUSIC)
***போதும்-போதும் என்று-நெஞ்சம் சலித்துக் கொள்ளுமடா
திரும்ப-வெளி இன்பம்-நாடி ஓடிச் செல்லுமடா
கடினம்-அந்த மனமடங்கல் மிகக்-கடினமடா (2)
தினம்-வேண்டி வேண்டிச் சொன்னபின்னும் எண்ணம் மட்டுப்படா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
 (MUSIC)
கரும்பு-கூட நுனியில்-இனிப்பு குறைந்திருக்குமடா
அதன் அடியில்-கொஞ்சம் ருசித்துப்-பார்க்க இனித்திருக்குமடா
யோகம் கூட முதலில்-கொஞ்சம் கசந்திருக்குமடா
நீ அதனில்-மூழ்கி முனைந்து-பழக இனிப்பு எழுமடா இறப்புக்கென்றே பிறப்பதிலே என்ன இன்பமடா (2)
பிறந்த-அன்றே இறக்கும்-தேதி வந்து-விட்டதடா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
  
*நாலும் கடந்து குடித்த பின்னால் =
1)   வேதம் கடந்து விளங்கும் வேதாந்த சாரத்தைக் குடித்த பின்னால்
2)   வேத சாரமான ,ப்ரம்ம சூத்திரம்,பகவத் கீதை,உபநிஷதங்கள் ஆகிய நான்கின் சாரத்தை உணர்ந்த பின்னால்

*நல்லது கிட்டக்கத் தோணுமடா = ப்ரம்மம் அருகே தோன்றும்

***Neti neti, meaning, "Not this, not this", is the method of Vedic analysis of negation. It is a keynote of Vedic inquiry. With its aid the Jnani negates identification with all things of this world which is not the Atman, in this way he negates the Anatman. Through this gradual process he negates the mind and transcends all worldly experiences that are negated till nothing remains but the Self. He attains union with the Absolute by denying the body, name, form, intellect, senses and all limiting adjuncts and discovers what remains, the true "I" alone.

**முதலில் பகவானின் நாம ரூபங்களைப் பிடித்துக் கொண்டு , பிறகு அதையும் கடந்தால் உண்மை உணர்வில் ஒன்றால்  நிகழும். இதைத்தான் கீழ்கண்ட  குறள்   சொல்கிறது
"பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்க"


***Release from bondage to inborn impulses is the Real Liberation
Tuesday, March 14, 2017

182 எனக்கு மனசு ராஜா(நேத்து பறிச்ச ரோஜா)
எனக்கு மனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச- கூஜா  (3)
உள்ளே இருந்தாலும் என்றும் வெளிச்-சென்று
யாரும்-காணா தூரம்-போகும் தூரம்-போனாலும் வேகம்-மாறாது
எனக்கு மனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா எனக்கு மனசு-ராஜா
(MUSIC)
உன்னைக் கோவில் என்றார்-நெஞ்சே அதனால்  தெய்வம்தான் 
தன்னைக் கல்லால் செய்தே நெஞ்சே உன்னில் நின்றான் பார்
(SM)
உன்னைக் கோவில் என்றார் நெஞ்சே அதனால் கல்லாய் தான் 
ஆனாய் நெஞ்சே அதனால் தெய்வம் கல்லாய் நின்றான் பார்
ஓடும் நெஞ்சே போதும் ஆட்டம் வெளியே போதும்
வெளியில் இல்லை ஞானம் உள்ளே செல்லலாம் வா  (SM)
எனக்கு மனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா  எனக்கு மனசு-ராஜா
(MUSIC)
 என்றும் மோகம் கொண்டாய்-நெஞ்சே மோகம் சோகம் தான்
எத்தனை முறை-நீ நொந்தாய்-கொண்டே எனினும் தாகம்-தான்
(SM)
 என்றும் மோகம் கொண்டாய்-நெஞ்சே மோகம் சோகம் தான்
எத்தனை முறை-நீ உண்டாய் மொண்டே எனினும் தாகம் தான் 
அலையும்-மனமே நில்லு 
(SM)
உனக்கும்-உள்ளே செல்லு 
(SM)
அலையும்-மன மே நில்லு உனக்கும்-உள்ளே செல்லு
உண்மை தன்னைக் கண்டு தனிமை பூணாய் நன்று
எனக்கு மனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா  எனக்கு மனசு-ராஜா
 (MUSIC)
*உள்ளத் தூய்மை கொள்ளல்-போதும் அதுவே அறம்-என்று
உனை-நீ துடைத்துப் பளிச்சிட-வேண்டும் அதுவே நனி-நன்று  
(1+SM+1)
நெஞ்சே போதும் சத்தம் **பொய் உனையாக்கும் பித்தம்
இன்றே-தூய்மை பூணு உன்-நிஜம் உள்ளே-காணுஉன்-நிஜம் உள்ளே-காணுஉன்-நிஜம் உள்ளே-காணு..


*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற  
**மாயை

Saturday, March 4, 2017

181 இசை பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) *


ஆ.. ஆ..
இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்
(1+SM+1)
*நாலாம் மறையும் *மேலோன் பதிகம்
*சொல்லு-மெய்ப் பொருளாகும் இசை-ஆண்டவன் உருவாகும்
இசை-மானிடர் உய்வாகும்
இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்
(MUSIC)
என் பாடல் சேய்-போலப் பிதற்றாகலாம்
என் தேடல் அதனாலே *வெளித்-தோன்றலாம்
(2)
*ஒரு-மேன்மை புரியாமல் நான்-பாடலாம் (2)
என்றாலும் இசைப்பாட்டில் நான் தேடுவேன்
என்றாகி..லும்-மெய்யை நான் காணவே
என்றாம்-கடலின் அலையும்-ஓயும் அன்றைக்கு நீராடல்
என நின்றிடல் வீணாகும் கண் கெட்டபின் தொழல்-போலும்  
(MUSIC)
சதிராடும் விதி-தந்த மோகங்களே
 எதிர்கொள்ள மதி-என்னில் ஏதுங்களே
*நிஜம்-தூங்கி நாளும்-சென்..றாச்சுங்களே
(Small THAALAM)
நிஜம்-தூங்கி நாளும்-நன்றாச்சுங்களே
தினம் சேரல் என்றாச்சு பாவங்களே (2)
(SM)
கத்தும் மன-அலை ஓடி-ஓடி வரும் என்னைத் துணியெனத் துவைத்து எடுக்குமதைப் பாருங்களேன்
(VSM)
என்றும் இசையுடன் பாடல் செய்தல்-விட நன்றாம்-பிறவழி என்ன செய்யவெனக் கூறுங்களேன்
(VSM)
என்னில் மனம்-விழத் தேற வேண்டும்-என இன்னும் பெரிதென என்ன செய்வதெனக் கூறுங்களேன் வாருங்களேன்
வாருங்களேன் கூறுங்களேன்

இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்*மேலோன் பதிகம் =நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நாலாம் மறையும் மேலாம் பதிகம் இறைவனில் இறைவனாய் பொதிந்துள்ள பொருளைக் கூறுவது மேலோன் பதிகம்( ப்ரம்ம சூத்திரம்)


*சொல்லு = வினைத்தொகை ; 

சொல்லிய, சொல்லிக்கொண்டிருக்கிற , சொல்லப்போகும் என்று காலம் கடந்த

*ஒரு மேன்மை புரியாமல்=1.எந்த ஒரு உயரிய மேன்மை தரக்கூடிய யாகம் போன்ற செயல்களைப் புரியாமல் (செய்யாமல்/ புரிந்து கொள்ளாமல்)
2. ஒன்று என்றாகிய நன்றின் மேன்மையைப் புரிந்து கொள்ளாமல்

*நிஜம்-தூங்கி= அறியாமை கொண்டுWednesday, March 1, 2017

180. உள்ளத்துக்குள்ளே (உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது )உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று அம்மா (2)
கண்ணால் கண்டால் அது நிஜமில்லை அம்மா அம்மா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்குது நன்றொன்று அம்மா
நன்மனத்துள்ளே நிஜமிருக்குது தானதைச் சென்றே (2)
கண்ணால் கண்டு எக்காலத்தும் உரைத்தவரில்லே உலகத்திலில்லே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே  
சொல்லால் சொன்னால் அது நிஜமில்லை பெண்ணே பெண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே
(MUSIC)
நூறின்- நூறு ஜென்மத்திலும் நம்முடனேகி
*நமைத் தொடர்ந்து- மெய்யும் வந்திடுதே அதற்கிலை மேனி   
(2)
கொண்ட ஜென்மம்-என்ற கடலைக்-கடந்து உண்மையில்-மேவி
நாம் உய்யும்போது தோன்றிடுமே உண்மையிலே-மெய் .. ஆ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே
 (MUSIC)
மெல்ல-மெல்ல வாயை-மூடி இருந்திடல் மோனம்
அதில் தொல்லை-போக எழுந்திடுமாம் அழகிய-ஞானம்
என்று-கூறும் உண்மை-தன்னை கவனிக்க வேண்டும்
இதை-ஊன்றிப் பார்த்து நினைத்திடாத எனக்கின்னும் வேணும்
ஆ.. ஆ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று அம்மா
கண்ணால் கண்டால் அது நிஜமில்லை அம்மா அம்மா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்குது நன்றொன்று நன்றே

* ஆத்மா